/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டருடன் கலந்துரையாடல் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி
/
கலெக்டருடன் கலந்துரையாடல் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி
கலெக்டருடன் கலந்துரையாடல் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி
கலெக்டருடன் கலந்துரையாடல் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி
ADDED : நவ 16, 2025 12:23 AM
திருப்பூர்: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், நடந்த குழந்தைகள் தின விழாவில், நிறுவனம் சாரா பராமரிப்பு திட்டத்தில் உள்ள குழந்தைகள் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற குழந்தைகளுடன் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்த்தினார். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால், பெற்றோர்கள் இருவரையும் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், நிறுவனம் சாரா பராமரிப்பின் கீழ் நிவாரண நிதி வழங்கப்பட்ட, 650 குழந்தைகள் மற்றும் நிதி ஆதரவுத் திட்டத்தில், 285 என மொத்தம் 935 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.
இதில் இரண்டாவது கட்டமாக, 92 குழந்தைகள் உடன் இந்த கலந்துரையாடலும், அவர்களுக்கான மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கு புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

