/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்! ஓட்டுச்சாவடியில் இன்றும் நடக்கிறது
/
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்! ஓட்டுச்சாவடியில் இன்றும் நடக்கிறது
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்! ஓட்டுச்சாவடியில் இன்றும் நடக்கிறது
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்! ஓட்டுச்சாவடியில் இன்றும் நடக்கிறது
UPDATED : நவ 16, 2025 02:25 AM
ADDED : நவ 16, 2025 12:32 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கான சிறப்பு முகாம் நடந்தது; படிவங்களை எடுத்து வந்த வாக்காளர், முகாமில் பூர்த்தி செய்து கொடுத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடது வருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று, படிவங்களை வழங்கி வருகின்றனர். வீட்டில் உள்ள வாக்காளருக்கு, தலா இரண்டு படிவங்கள் வழங்கப்பட வேண்டும்.
பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட, மங்கலம் சுற்றுப்பகுதிகளில், தலா ஒரு படிவம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்காமல் மக்கள் காத்திருக்கின்றனர். பெரும்பாலும், ஓட்டுச்சாவடி எல்லையில் உள்ள வீடுகளில், வாக்காளர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், படிவம் பூர்த்தி செய்வது தொடர்பாக தெளிவான விளக்கம் இல்லாததால், வாக்காளர் குழப்பத்தில் உள்ளனர். வாக்காளரின் தற்போதய விவரம், கடந்த, 2002 திருத்த பணியின் போது இருந்த விவரங்கள், உறவினராக உள்ள வாக்காளர் விவரம் என, அந்தந்த காலங்களில் எழுத வேண்டும். இதில், பல்வேறு குழப்பம் ஏற்படுவதால், பூர்த்தி செய்யும் பணி சுணக்கமாகியுள்ளது.
இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, படிவம் பூர்த்தி செய்வது, பழைய 2002 வாக்காளர் பட்டியலை பார்வையிடும் வசதியுடன், ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், திருப்பூர், பல்லடம் உட்பட, வாக்காளர் பதிவு அலுவலர்களின் முன்னறிவிப்பு இல்லாததால், நேற்று முகாம் நடப்பது பலருக்கும் தெரியவில்லை.
தொழிலாளர்களுக்கு இன்று விடுமுறை என்பதால், முகாம் நடப்பது குறித்து முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான், தங்களது விவரங்களுடன் சென்று, எளிதாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற முடியும் என, வாக்காளர் கூறுகின்றனர்.
இதுபோன்ற சிறப்பு முகாம்களில், கட்சிகளை சேர்ந்த ஏஜன்டுகளும், தன்னார்வலர்களும் கூட, வாக்காளர்கள் உதவிக்காக இடம்பெற வேண்டும். குறிப்பாக, படிவங்களை பூர்த்தி செய்ய, பயிற்சி அளிக்கப்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியரை அமர்த்தவும், மாவட்ட நிர்வாகம் திட்டமிட வேண்டும் என்பது, வாக்காளரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சரியான முன்னறிவிப்பு இல்லாததால், சிறப்பு முகாம்களில் வாக்காளர் கூட்டம் குறைவாக இருந்தது. தகவல் கிடைத்து, விடுமுறை நாளான இன்று அதிக வாக்காளர் வரவும் வாய்ப்புள்ளதாக, கட்சியினர் கூறினர்.

