sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாதனை சாத்தியம்; சரித்திரம் நிச்சயம் செயற்கையிழை ஆடை உற்பத்தி யில் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்புகள்

/

சாதனை சாத்தியம்; சரித்திரம் நிச்சயம் செயற்கையிழை ஆடை உற்பத்தி யில் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்புகள்

சாதனை சாத்தியம்; சரித்திரம் நிச்சயம் செயற்கையிழை ஆடை உற்பத்தி யில் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்புகள்

சாதனை சாத்தியம்; சரித்திரம் நிச்சயம் செயற்கையிழை ஆடை உற்பத்தி யில் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்புகள்


ADDED : அக் 06, 2024 03:34 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செயற்கை நுாலிழை ஆயத்த ஆடை உற்பத்தியில் சாதித்துக்காட்ட, திருப்பூர் பின்னலாடைத்துறை தயாராக உள்ளது. ''புதிய விதிமுறை களுடன், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை( பி.எல்.ஐ.,) திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,'' என்பது, ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேலின் வேண்டுகோள்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில், மத்திய ஜவுளித்துறை செயலர் ரிச்னா ஷா, இணை செயலர் ராஜிவ் சக்சேனா ஆகியோர், ஏற்றுமதியாளர்களை சந்தித்து பேசினர். ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் இளங்கோ, இணை செயலாளர் குமார் துரைசாமி, 'பிராண்ட்' கமிட்டி தலைவர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசியதாவது:

மத்திய ஜவுளித்துறை செயலர், நாட்டின் ஜவுளித்தொழில் நிலவரத்தை நன்கு அறிவார். குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் அவற்றின் தீர்வுகள் குறித்தும் அறிவார். செயற்கை நுாலிழை ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலை ஊக்கு விக்க, புதிய விதிமுறைகளுடன், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.,) திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இத்திட்டத்தால், திருப்பூரில் விளையாட்டு ஆடை உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியும். விரைவில், புதிய அம்சங்களுடன் கூடிய உற்பத்தி சார் மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பின்னலாடை ஏற்றுமதியில், செயற்கை நுாலிழை ஆடைகள் பங்களிப்பு, 10 சதவீதமாக உள்ளது. இனிவரும் நாட்களில், புதிய திட்டம் மற்றும் சலுகைகள் வாயிலாக, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.

இறக்குமதி கட்டுப்பாடு


செயற்கை நுாலிழை 'பைபர்' மற்றும் நுால் உற்பத்திக்கும் வழிகாட்ட வேண்டும். உற்பத்தி சார் மானிய திட்டம் மூலம், செயற்கை நுாலிழை, பைபர் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி தொழில் துவங்க உதவிட வேண்டும். குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்துள்ளதன் வாயிலாக, 'பேப்ரிக்' இறக்குமதி கட்டுக்குள் வரும்; இனி, நம் நாட்டிலேயே, அரசு திட்டங்கள் வாயிலாக துவங்க வேண்டும்.

ரூ.400 கோடிக்கு வர்த்தகம்


கடந்த, 10 ஆண்டுகளில், விளையாட்டு ஆடை உற்பத்தி, 400 கோடி ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. புதிதாக வரும் உற்பத்தி சார் மானிய திட்டம் மூலமாக, விளையாட்டு ஆடை, தொழில்நுட்ப ஆடை, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு உதவிட வேண்டும்.

வரும் 2025ல் நடக்க உள்ள 'பாரத் டெக்ஸ்' கண்காட்சியில், வாடிக்கையாளர் வசதிக்காக பிரதான அரங்கை திருப்பூருக்கு ஒதுக்க வேண்டும். திருப்பூருக்கு முன்னுரிமை அளித்து, முதல் அரங்கிலேயே ஸ்டால் ஒதுக்க வேண்டும். மதிப்பு கூட் டப்பட்ட, பசுமை சார் உற்பத்தி சாதனைகளை காட்சிப்படுத்த உதவிட வேண்டும்.

ஆண்டுதோறும் கண்காட்சி


'பாரத் டெக்ஸ்' கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி, சர்வதேச வாடிக்கையாளர்களை பங்கேற்க செய்ய வேண்டும். அமெரிக்காவின் 'மேஜிக்' கண்காட்சி போல், இந்தியாவின் 'பாரத் டெக்ஸ்' கண்காட்சியை, மதிப்பு வாய்ந்த சர்வதேச கண்காட்சியாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு வர்த்தகர் வந்து பார்க்கும் போது, நமது புதிய தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். திருப்பூரில், ஒரு சில 'பிராண்ட்'கள் மட்டுமே உள்ளன; புதிய 'பிராண்ட்'களை உருவாக்க, மத்திய, மாநில அர சுகள் உதவிட வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:

பல்வேறு சவால்களை கடந்து, நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஆக., மாதம் 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பசுமை சார் உற்பத்தியில் திருப்பூர் முன்னோடியாக மாறியுள்ளது. வரும் 2030ல், திருப்பூரின் ஒட்டுமொத்த பின்னலாடை வர்த்தகத்தை, ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

'பாரத் டெக்ஸ்' கண்காட்சியில், பின்னலாடை துறைக்கு தனி அரங்கு ஒதுக்கியதற்கு நன்றி; வரும் 2025ல் நடக்கும் கண்காட்சியில், முதல் அல்லது இரண்டாவது அரங்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கண்காட்சிக்கு சென்றுவர, போக்குவரத்து மானியமும், கண்காட்சி மானியமும் வழங்க வேண்டும்.

வட்டி மானிய சலுகை


'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி மானியம், 3 சதவீதம் என்பதை,5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். உற்பத்தி சார் மானிய திட்டத்தை, (பி.எல்.ஐ.,) குறைந்தபட்சம் 25 கோடி ரூபாய் முதலீட்டில், அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு பரிவர்த்தனை' என்ற அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

ஒட்டுமொத்த திருப்பூர் பின்னலாடை தொழில்துறை வளர்ச்சிக்கு உதவியாக, வர்த்தக கண்காட்சி அரங்கு அமைக்க உதவிட வேண்டும். திருப்பூர் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, திருப்பூரில், 'ஐ.ஐ.டி.,' கிளையை திறக்க வேண்டும். பின்னலாடை உற்பத்தி, 'பிராசசிங்' தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

டில்லியில் நடக்கும் 'பாரத் டெக்ஸ்' சர்வதேச ஜவுளிக்கண்காட்சியில், திருப்பூர் தொழில்துறையினர் திரளாக பங்கேற்போம்; 2025ல் நடக்கும் கண்காட்சியை வெற்றிகரமாகநடத்த ஒத்துழைப்போம்.






      Dinamalar
      Follow us