/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதி பெறாத கட்டடங்களுக்கு வரி வசூலிக்க அதிரடி உத்தரவு
/
அனுமதி பெறாத கட்டடங்களுக்கு வரி வசூலிக்க அதிரடி உத்தரவு
அனுமதி பெறாத கட்டடங்களுக்கு வரி வசூலிக்க அதிரடி உத்தரவு
அனுமதி பெறாத கட்டடங்களுக்கு வரி வசூலிக்க அதிரடி உத்தரவு
ADDED : டிச 18, 2024 08:26 PM
உடுமலை; பேரூராட்சிகளில், சொத்து வரி வசூலில் கவனம் செலுத்த வேண்டும், அதோடு, கட்டட அனுமதி பெறாத கட்டடங்கள் மற்றும் ஏற்கனவே வரி செலுத்தி வரும் கட்டட உரிமையாளர்கள், கூடுதல் பரப்பில் கட்டடங்களை கட்டி அதற்கு வரி விதிப்பு பெறாத பட்சத்தில், அந்த கட்டடங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு வரி விதிப்பு செய்ய வேண்டும் என, பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நவ., மாத நிலவரப்படி, கணியூரில் வசூலிக்கப்பட வேண்டிய, 1.51 லட்சம் ரூபாயில், 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.
கொமரலிங்கத்தில் வசூலிக்கப்பட வேண்டிய, 3.55 லட்சம் ரூபாயில், 2.67 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம், தளி, சங்கராமநல்லுார் பேரூராட்சிகளிலும், வரி நிலுவை தொகைகளை விரைவில் வசூலிக்க வேண்டும்' என, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.