தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற அதிரடி உத்தரவு

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற அதிரடி உத்தரவு

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற அதிரடி உத்தரவு


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி, சேவூர் ரோடு முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை 300-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. தெருவோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டும், பலர் அங்கு செல்லாமல் சாலையோரங்களிலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காய்கறி உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றவும், அகற்றப்பட்ட இடங்கள் குறித்த முழு விவரங்களையும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

வருவாய், காவல், நெடுஞ்சாலை, நகராட்சி, குடிநீர் வழங்கல் மற்றும் தீயணைப்புத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us