/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரப்பர் இறக்குமதி செய்ய நடவடிக்கை; மூலப்பொருள் விலை உயர்வு எதிரொலி
/
ரப்பர் இறக்குமதி செய்ய நடவடிக்கை; மூலப்பொருள் விலை உயர்வு எதிரொலி
ரப்பர் இறக்குமதி செய்ய நடவடிக்கை; மூலப்பொருள் விலை உயர்வு எதிரொலி
ரப்பர் இறக்குமதி செய்ய நடவடிக்கை; மூலப்பொருள் விலை உயர்வு எதிரொலி
ADDED : செப் 25, 2024 12:19 AM

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழிலில், முக்கிய பங்கு வகிக்கிறது எலாஸ்டிக் தொழில். உள்ளாடை ரகங்களில் துவங்கி, விளையாட்டு ஆடைகள், ஆக்டிவ்' ரகங்கள் உற்பத்தியில், எலாஸ்டிக் பயன்பாடு அத்தியவாசியமாக மாறியுள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கு, எலாஸ்டிக் பயன்பாடு அவசியமாகிவிட்டது.
எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் திருப்பூரில், 200க்கும் அதிகமான நிறுவனங்களை இயக்கி வருகின்றனர். மற்ற ஜாப் ஒர்க்' நிறுவனங்கள், சேவையை செய்து கட்டணம் பெறுகின்றன. எலாஸ்டிக் பிரிவில், அதிக முதலீடு செய்து, சேவையாற்ற வேண்டிய நிலை உள்ளது.
கடந்த, 1980ம் ஆண்டுகளுக்கு பிறகே, எலாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தது. எலாஸ்டிக் தயாரிக்க, பாலியஸ்டர் மற்றும் நைலான் நுால்கள் அவசியம். பெட்ரோலிய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதால், அடிக்கடி இவற்றின் விலை உயர்கிறது.
தேவை அதிகரித்த காரணத்தால், தாய்லாந்து, மலேசிய நாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது.
ரப்பர் விலை, கிலோ, 230 ரூபாயாக இருந்தது; 280 ரூபாய் வரை உயர்ந்தது; தற்போது, 260 ஆககுறைந்துள்ளது. இருப்பினும், மீண்டும் விலை உயரும் என்பதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த இக்கட்டான நிலை குறைத்து விவாதிக்க, வரும் 27ம் தேதி அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
வரிச்சலுகை வேண்டும்!
ரப்பர், பாலியஸ்டர் நுால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. மின் கட்டண உயர்வு, கடுமையாக உயர்ந்துள்ளது. எலாஸ்டிக் தொழில் இதுவரை இல்லாத அளவுக்கு சிரமத்தை சந்தித்து வருகிறது. மாதம் ஒன்றுக்கு, ஒரு லட்சம் மீட்டர் எலாஸ்டிக் உற்பத்தி செய்கிறோம். கடும் விலை உயர்வு காரணமாக, தொழில் நடத்துவது பெரிய சவாலாக மாறியுள்ளது. கூட்டாக இணைந்து, ரப்பர் இறக்குமதி செய்து பயன்படுத்த, வரிச்சலுகை அவசியம் தேவை. அடுத்தகட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கோவிந்தசாமி
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்
மற்றும் விற்பனையாளர்கள்
சங்க தலைவர்