ADDED : அக் 09, 2025 12:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்துார் சங்கம், அனைத்து தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் அனுப்பர்பாளையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் விரைவாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். திருப்பூரில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் அமெரிக்காவின் வரிவிதிப்பு காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டு சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்; அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நல வாரிய அட்டை உள்ள நலவாரியம் அலுவலகம் மூலம் தீபாவளிக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.