/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் பஸ் கட்டணம்; தொடரும் குளறுபடி
/
கூடுதல் பஸ் கட்டணம்; தொடரும் குளறுபடி
ADDED : டிச 27, 2024 11:33 PM
திருப்பூர்,; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து டவுன் பஸ்களில் ராக்கியாபாளையம் முதல் முதலிபாளையம் பகுதி வரை பயணக்கட்டணமாக 13 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள் அளித்த புகாருக்கு திருப்பூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், ''அந்த வழித்தடத்தில், '16/20'ம் எண் வழித்தட பஸ்சில் 9 ரூபாய்; '47'ம் எண் வழித்தட பஸ்சில் 10 ரூபாய் மட்டுமே கட்டணம்'' என்று விளக்கம் அளித்துள்ளனர்.
சமூக ஆர்வலர் முதலிபாளையத்தைச் சேர்ந்த பால் பாண்டி கூறியதாவது:
டவுன் பஸ்களில் ஒரு ஸ்டேஜ் என்பது 2 கி.மீ.,; இடை நிறுத்தம் 500 மீ., என்று போக்கு வரத்துதுறை நிர்ணயித்துள்ளது. போக்குவரத்து துறையோ அதை விடக் கூடுதலாக டிக்கெட் கட்டணம் நிர்ணயித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால், அபராதம் விதிப்பதாக போக்குவரத்து துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், இழப்பைச் சந்திக்கும் பயணிக்கு எந்த பயனும் இல்லை.
ஆண்டாண்டு காலமாக அவர்கள் கூடுதல் கட்டணம் தான் அளித்து வருகின்றனர். அரசாணை தெரிவிக்கும் குறைந்தபட்ச பஸ் கட்டணத்துடன் ஒரு ரூபாய் காப்பீடு நிதிக்காக என்று கூறி கட்டணத்தை அதிகரித்துள்ளனர். அதன்படி இது வரை யாருக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டது என்ற விவரம் இல்லை.
இது டவுன் பஸ்களின் நிலை. அதே போல் வெளியூர் பஸ்களிலும் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. மினி பஸ்கள் நிலை என்னவென்றே சொல்ல முடியாத அளவில் உள்ளது.
பெரும்பாலான பஸ்களில் வழித்தடம்; பஸ் நிற்குமிடம், கட்டண விவரம் போன்ற எந்த தகவலும் பயணிகள் பார்வையில் படும் வகையில் இருப்பதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

