/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்; பொதுமக்கள் வலியுறுத்தல்
/
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்; பொதுமக்கள் வலியுறுத்தல்
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்; பொதுமக்கள் வலியுறுத்தல்
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்; பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 23, 2024 10:56 PM
உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், உடுமலையிலிருந்து கடைக்கோடியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
குறைந்த அளவில் இயக்கப்படும், டவுன்பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், மக்கள், மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பஸ் வசதி குறைவாக உள்ள கிராமங்களுக்கு, கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.