ADDED : நவ 06, 2026 08:59 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலையிலிருந்து கடைக்கோடி கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
