/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பதி, ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டி
/
திருப்பதி, ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டி
ADDED : ஜூலை 12, 2025 12:23 AM
திருப்பூர்; கோவையில் இருந்து மன்னார்குடி, ராமேஸ்வரம், திருப்பதி, நாகர்கோவில் செல்லும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் பெறும் பயணிகள் வசதிக்காக கூடுதல் படுக்கை வசதி, ஏ.சி., பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக மன்னார்குடிக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் (எண்:16616), நாகர்கோவிலுக்கு, எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22668) தினமும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களில் ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. ஞாயிறு, செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி வாரத்தின் நான்கு நாட்கள் கோவையில் இருந்து திருப்பதி ரயில் (எண்:22616) இயக்கப்படுகிறது.
மறுமார்க்கமாக, திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமை திருப்பதி - கோவை ரயில் (எண்:22615) இயங்குகிறது. இந்த ரயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை தோறும், கோவை - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் (எண்:16618) இயக்கப்படுகிறது.
மறுமார்க்கமாக, புதன் இரவு புறப்படும் ரயில், வியாழன் காலை கோவை வந்தடைகிறது. இருமார்க்கத்திலும், ஒரு படுக்கை வசதி பெட்டி வரும், 15ம் தேதி முதல் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளதாக, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.