/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் டி.ஜி.பி., திருப்பூரில் திடீர் ஆய்வு
/
கூடுதல் டி.ஜி.பி., திருப்பூரில் திடீர் ஆய்வு
ADDED : ஜன 12, 2025 02:20 AM
திருப்பூர்: தமிழக கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வா தம் நேற்று திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை மேற்ெகாண்டார்.
இதில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், கோவை டி.ஐ.ஜி., சசி மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், எஸ்.பி.,க்கள் கிரிஷ் அசோக் யாதவ் (திருப்பூர்), கார்த்திகேயன் (கோவை), ஜவஹர் (ஈரோடு) மற்றும் நிஷா (நீலகிரி) ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள்; மேற்கு மண்டல போலீஸ் பிரிவில் அண்மையில் நடந்த குற்றச் சம்பவங்கள், நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை; போலீஸ் நடவடிக்கை, போலீஸ் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள்; கோர்ட் விசாரணையில் உள்ள வழக்குகள் நிலை; முதல்வர் தனிப்பிரிவில் பெறப்பட்ட புகார்கள் மீதான நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல்லடம் மூன்று பேர் கொலை; இச்சம்பவத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் விசாரணை; உரிய ஆவணங்கள் இன்றி ஊடுருவியுள்ள வெளி நாட்டினர் குறித்த பிரச்னைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்னையில் உரிய கவனம் செலுத்தவும், குற்றச் சம்பவங்கள், விபத்துகள் போன்றவை ஏற்படாமல் உரிய எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

