/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு திட்டத்தில் கூடுதல் குளம் - குட்டை; வேண்டுதல் நிறைவேற தீர்த்தக்குட யாத்திரை

ADDED : ஏப் 15, 2025 06:18 AM

திருப்பூர்; கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வேண்டுதலுடன், கடந்த 11 ஆண்டாக, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர், சித்திரை முதல் நாளன்று, தீர்த்தக்குட யாத்திரை நடத்தி வருகின்றனர்.
தற்போது, திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதை வேண்டுதலாக முன்வைத்து, சித்திரை முதல் நாளான நேற்று, தீர்த்தக்குட யாத்திரை நடத்தினர்.
மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவிலில் வழிபட்டு, அங்குள்ள பவானி நீரை எடுத்து, பெருந்துறை துவங்கி காரமடை வரையுள்ள அத்திக்கடவு திட்டம் சார்ந்த கிராமங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறுகையில், ''விடுபட்ட, 1,400க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும்; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டசபையில் இதுதொடர்பாக அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளார்.
விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டு, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கவே, தீர்த்தக்குட யாத்திரை மேற்கொண்டுள்ளோம்,'' என்றார்.