/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விவசாய விளைபொருட்களுக்கு இ-நாம் வாயிலாக கூடுதல் விலை'
/
'விவசாய விளைபொருட்களுக்கு இ-நாம் வாயிலாக கூடுதல் விலை'
'விவசாய விளைபொருட்களுக்கு இ-நாம் வாயிலாக கூடுதல் விலை'
'விவசாய விளைபொருட்களுக்கு இ-நாம் வாயிலாக கூடுதல் விலை'
ADDED : ஆக 06, 2025 11:00 PM
திருப்பூர்; ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், விளைபொருட்களின் வரத்தை அதிகரிக்க செய்யும் வகையில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக்கூட்டம், குன்னத்துார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்தது.
கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பேசியதாவது:
விற்பனைக்கூடத்தின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் இருக்கும். 'இ-நாம்' வாயிலாக விளைபொருட்களை விற்பதன் வாயிலாக, விவசாயிகள் வழங்கும் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புண்டு. கிடங்குகளில் விளைபொருட்களை வாடகை அடிப்படையிலும் வைத்துக் கொள்ளலாம். விளை பொருட்கள் மீது விவசாயிகள் பொருளீட்டு கடன் பெற முடியும். விவசாயிகள், எவ்வித தயக்கமும் இல்லாமல், தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வாயிலாக விற்பனை செய்யலாம். இவ்வாறு, அவர் பேசினார்.
ஊத்துக்குளி வட்டார உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) நாகராஜன், உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் முறை குறித்து விளக்கினார்.