/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதி குருமூர்த்தி சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
/
ஆதி குருமூர்த்தி சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 16, 2024 01:42 AM

அவிநாசி;அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள, திருப்புக்கொளியூர் மடாலயம், ஆதி குருமூர்த்தி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
அவிநாசி, வேலாயுதம்பாளையம் கிராமம், மங்கலம் ரோடு, காசிகவுண்டன்புதுாரில் ஸ்ரீபிரம்ம சித்தி விநாயகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி, திருநாவுக்கரசர் சுவாமிகள், ஆதி குருமூர்த்தி சுவாமி கோவில்கள் உள்ளன. திருப்பணி நிறைவு செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா, 13ம் தேதி துவங்கியது. விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கணபதி வேள்வி, கோ பூஜையும், முளைப் பாலிகை எடுத்து வருதல், அவிநாசிலிங்கேஸ்வர் கோவிலில் இருந்து தீர்த்தகுடம் எடுத்து வருதல் நடந்தது. 14ம் தேதி, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தனம், ரஜிதபந்தனம் நடந்தது.
நேற்று காலை விநாயகர் பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடந்தது. காலை 8:50 மணிக்கு ஸ்ரீ ஆதிகுருமூர்த்தி சுவாமி மற்றும் பிற தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், மகாபிஷேகம், பேரொளி வழிபாடு, அலங்கார மஹா தீபாராதனை நடந்தது.
விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி தலைமையில், மடாலய சீடர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.