/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிர்வாகப் பணிகள்; ஊராட்சிகளில் சுணக்கம்
/
நிர்வாகப் பணிகள்; ஊராட்சிகளில் சுணக்கம்
ADDED : ஜன 27, 2025 12:12 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 265 கிராம ஊராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள், தனி அலுவலர் பொறுப்பில் இருக்கின்றன.
ஊராட்சிகளின் நிர்வாக அலுவலராக செயல்படுவது, ஊராட்சி பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பது, பணம் விடுவிப்பது போன்ற பணிகளுக்கு, தனி அலுவலராக உள்ள பி.டி.ஓ., மற்றும் மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் கையொப்பமிடலாம் என அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், அதற்காக, 'லாகின் ஐ.டி., ' இணையதளத்தில் மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறது; இதனால் வழக்கமான நிர்வாக பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சிகளில், கட்டட வரைபட உரிமம், புதிய வரிவிதிப்பு, வீட்டுமனை அங்கீகாரம் என, பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

