/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க., பிளவுபட்டதால் வெற்றியை இழந்தோம்; மனம் திறக்கிறார் சைதை துரைசாமி
/
அ.தி.மு.க., பிளவுபட்டதால் வெற்றியை இழந்தோம்; மனம் திறக்கிறார் சைதை துரைசாமி
அ.தி.மு.க., பிளவுபட்டதால் வெற்றியை இழந்தோம்; மனம் திறக்கிறார் சைதை துரைசாமி
அ.தி.மு.க., பிளவுபட்டதால் வெற்றியை இழந்தோம்; மனம் திறக்கிறார் சைதை துரைசாமி
ADDED : நவ 25, 2024 06:33 AM

திருப்பூர்; ''எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் இரு அணிகளாக அ.தி.மு.க., பிளவுபட்டதால் வெற்றியை இழந்தோம்'' என, உலக எம்.ஜி.ஆர்., பேரவை தலைவர் சைதை துரைசாமி பேசினார்.
திருப்பூரில் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் பேரவை சார்பில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மற்றும் முன்னாள் முதல்வர் ஜானகி நுாற்றாண்டு விழாவில், சைதை துரைசாமி பேசியதாவது: திரைப்படங்களில் கூறிய அனைத்து கருத்துகளையும், ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு எம்.ஜி.ஆர்., நிறைவேற்றி காட்டினார்.
சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல், தமிழ் மண்ணுக்கும், மக்களுக்குமாக எம்.ஜி.ஆர்., வாழ்ந்தார்.
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, அவரது மனைவி ஜானகிதான் முதல்வராக வேண்டுமென வற்புறுத்தி, முதல்வராக பொறுப்பேற்க வைத்தோம். கட்சி ஜா., - ஜெ., அணிகளாக பிளவுபட்ட பிறகு, வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
கட்சி பிளவுபட்டதால், நாமே தி.மு.க.,வுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டோம் என்றும், கட்சியை இணைக்க வேண்டுமெனவும் எடுத்துரைத்தோம்.; கட்சியை இணைத்தோம்; அ.தி.மு.க., இணையாமல் இருந்திருந்தால், இன்னும் இரண்டு அணியாகத்தான் இருந்திருக்கும்.
எம்.ஜி.ஆர்., இன்றுவரை கண்ணுக்கு தெரியாத மின்சாரம் போல் மக்களிடம் நீக்கமற நிற்கிறார். எம்.ஜி.ஆர்., கிடைத்தது போல், உலகின் வேறு எந்த திரையுலக பிரமுகர்களுக்கும் செல்வாக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறு, அவர் பேசினார்.