ADDED : அக் 01, 2025 12:11 AM
அவிநாசி; திருமுருகன் பூண்டி நகராட்சியில் உள்ள அன்னமயி அரங்கத்தில், அவிநாசி கோட்டம் சார்பில் நடைபெற்ற முகாமில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை வகித்தர். அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி முன்னிலை வகித்தார்.
இதில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் வாயிலாக, வீடுகளில் சூரிய மின் தகடுகள் பொருத்த வங்கிகளில் மானியத்துடன் கடன் பெறுவது, திட்டத்தில், தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் முறை, விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சோலார் சூரிய மின் தகடுகள் அமைக்கும் வீடுகளுக்கு மத்திய அரசு மானியத்தில் ஒரு கிலோ வாட்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய், 2 கிலோ வாட்டுக்கு 60 ஆயிரம், 3 கிலோ வாட்டுக்கு, 78 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இதில் நுகர்வோர், சோலார் சூரிய மின் தகடுகள் அமைக்கும் தொழில் நிறுவனங்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், இத்திட்டத்தில் சேர விரும்பும் நுகர்வோர் அந்தந்த பகுதி பிரிவு மின் அலுவலகத்தில் உள்ள செயற்பொறியாளரை தொடர்பு கொள்ள மின்வாரியத்தினர் அறிவுறுத்தினர்.