ADDED : அக் 01, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு, சங்க தலைவர் நாகேஷ் தலைமை வகித்தார்.ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, சங்கத்தின் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வரும் 2026 ஏப்., 1 முதல், சாயம், பிளீச்சிங், பிரின்டிங் ஆலைகளுக்கு, 45 நாட்கள் மட்டுமே கடன் கொடுப்பது; 45 நாட்களில் 'பேமென்ட்' என்ற சட்டத்தை, பதிவு செய்த வணிகர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.