/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய மின் மோட்டார் பகலில் இயக்க அறிவுரை
/
விவசாய மின் மோட்டார் பகலில் இயக்க அறிவுரை
ADDED : ஜூன் 20, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய ஒளி மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தலாம்.
மின் தட்டுப்பாட்டின் அளவினை குறைக்க இயலும். நம் நாட்டினை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேற்றிடும் நோக்கில் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திட விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்துமாறு அவிநாசி இயக்குதலும் பேணுதலும் மின் வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.