ADDED : செப் 06, 2025 06:43 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்தது.
அதில், கலெக்டர் பேசியதாவது: தமிழக அரசின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், ஊரக பகுதிகளில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டம், பண்டைய பழங்குடியினர் பிரதமர் பெருந்திட்டம், எம்.பி., உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம், துாய்மை பாரத இயக்கம், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகள் உட்பட சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதிய திட்டங்களுக்கு, துறை அலு வலர்கள் திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, உதவி இயக்குனர் (பயிற்சி) ஹர்ஷா, செயற் பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) மோகனசுந்தரம் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.