/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீண்ட இழுபறிக்கு பின் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறப்பு முழுமையான பயன்பாட்டிற்கு வர விரிவான ஆய்வு தேவை
/
நீண்ட இழுபறிக்கு பின் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறப்பு முழுமையான பயன்பாட்டிற்கு வர விரிவான ஆய்வு தேவை
நீண்ட இழுபறிக்கு பின் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறப்பு முழுமையான பயன்பாட்டிற்கு வர விரிவான ஆய்வு தேவை
நீண்ட இழுபறிக்கு பின் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறப்பு முழுமையான பயன்பாட்டிற்கு வர விரிவான ஆய்வு தேவை
ADDED : மே 29, 2025 11:46 PM

உடுமலை,;உடுமலையில், புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பஸ் ஸ்டாண்ட் நேற்று திறக்கப்பட்டது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து மப்சல் பஸ்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து டவுன் பஸ்கள் என, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் நெரிசல் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், 15 ஆண்டுக்கு முன், வி.பி.,புரம் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது.
நீண்ட இழுபறிக்குப்பின், கடந்த, 2018ல், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய, 3.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
திட்ட காலம் முடிந்தும், 5 ஆண்டுகளாக 'ஆமை' வேகத்தில் பணி முடிந்து, ஆறு மாதத்திற்கு முன் பணி முடிந்தது. இருப்பினும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்தது. நேற்று, தமிழக முதல்வரால், நகராட்சி கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அண்ணா பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
தலைமைசெயலகத்திலிருந்து வீடியோ கான்ப்ரன்ஸ் வாயிலாக, தமிழக முதல்வர் திறந்து வைத்தார். உடுமலை பஸ் ஸ்டாண்டில் நடந்த விழாவில், எம்.பி., ஈஸ்வரசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் பத்மநாபன், நகராட்சி தலைவர் மத்தீன், மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் ராஜாராம், கமிஷனர் சரவணகுமார் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
பயன்பாட்டுக்கு வருமா
பஸ் ஸ்டாண்ட் நேற்று திறக்கப்பட்ட நிலையிலும், ஒரு பகுதியில், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களும், ரவுண்டானா பகுதியில் கார், ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாகவும், பழநி ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளும் என முழுமையாக மறிக்கப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்டிற்குள், பஸ்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வசதிகள் பயணியருக்கு இல்லை. அவர்கள் அமர இருக்கை, காத்திருக்கும் பகுதி ஒதுக்கீடு செய்யவில்லை.
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டிற்கும், கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்கும் இடையில், ரவுண்டானா ரோடு சந்திப்பு பகுதிகள் உள்ளன.
கூடுதல் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இயக்க துவங்கினால், பயணிகள் அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு மத்தியில் ரோட்டை கடக்க முடியாது.
இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாமலும், எந்த பகுதி செல்லும் பஸ்களுக்கு மாற்றுவது என, அரசு துறை அதிகாரிகள் இணைந்து திட்டமிடவில்லை. இதனால், முழுமையாக பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராத நிலை உள்ளது.
எனவே, பைபாஸ் ரோட்டில் வரும் பஸ்களை மாற்று வழித்தடத்தில் இயக்குதல், பஸ் ஸ்டாண்டிற்கும், கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்கும் இடையில், வழித்தடம் அமைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் செய்ய அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

