/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகர்வால் கண் மருத்துவமனை திருப்பூரில் திறப்பு விழா
/
அகர்வால் கண் மருத்துவமனை திருப்பூரில் திறப்பு விழா
அகர்வால் கண் மருத்துவமனை திருப்பூரில் திறப்பு விழா
அகர்வால் கண் மருத்துவமனை திருப்பூரில் திறப்பு விழா
ADDED : ஏப் 08, 2025 06:27 AM

திருப்பூர்; திருப்பூர், அவிநாசி சாலையில், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையை திருப்பூர் ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பூஜா ஸ்கேன் 4டி துணை தலைவர் டாக்டர் கவிதாலட்சுமி வரவேற்றார். கிட்ஸ் கிளப் கல்விக் குழும தலைவர் மோகன் கார்த்திக், ரோட்டரி மாவட்ட கவர்னர் தனசேகர், கண் மருத்துவர்கள் கரண்சிங் தனராஜ் சவான், தீபிகா, தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ''இம்மாதம் முழுக்க, 50 வயது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்குகிறோம்.
நவீன தொழில்நுட்பங்களுடன், கண்புரை மற்றும் கண் அழுத்த நோய்களுக்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட கண் தொடர்புடைய அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படும்,'' என்றார்.
மருத்துவமனை துணை தலைவர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.