/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.ஜி.எம். குளோபல்சி.பி.எஸ்.இ. பள்ளி திறப்பு
/
ஏ.ஜி.எம். குளோபல்சி.பி.எஸ்.இ. பள்ளி திறப்பு
ADDED : மார் 02, 2026 06:02 AM

பல்லடம்: பல்லடம், - பொள்ளாச்சி ரோடு, கே.கிருஷ்ணாபுரம் பகுதியில், ஏ.ஜி.எம். குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் மங்களம் வரவேற்றார். நிர்வாக அறங்காவலர்கள் மோனேஷ் முருகேசன், பாலகுமார் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியை திறந்துவைத்து இதன் நிறுவனர் கிஷோர் முருகேசன் பேசியதாவது:
குழந்தை பருவத்திலேயே மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மாணவர்களுக்கு, அபாகஸ் முறையில் கணிதம் கற்பிக்கப்படும். மூன்று ஆண்டு இங்கு படித்தாலே ஹிந்தி பேசவும், எழுதவும் முடியும்.
பள்ளியில், தினசரி நாளிதழ் வாசிப்பது, தண்ணீர் குடிப்பது என, ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு பள்ளியிலேயே புராஜெக்ட் செய்யப்படும். 700 மாணவர் களுக்கு இடம் இருந்தாலும், நடப்பு ஆண்டு ஸ்காலர்ஷிப் அடிப்படையில், 250 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர்.
இவ்வாறு, கிேஷார் முருகேசன் பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக நிறுவனரின் உறவினர்கள் தேன்மொழி, சித்ரா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

