sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நகைக்கடன் வழங்க அழுத்தம்: கூட்டுறவு பணியாளர் எதிர்ப்பு

/

 நகைக்கடன் வழங்க அழுத்தம்: கூட்டுறவு பணியாளர் எதிர்ப்பு

 நகைக்கடன் வழங்க அழுத்தம்: கூட்டுறவு பணியாளர் எதிர்ப்பு

 நகைக்கடன் வழங்க அழுத்தம்: கூட்டுறவு பணியாளர் எதிர்ப்பு


ADDED : மார் 02, 2026 06:08 AM

Google News

ADDED : மார் 02, 2026 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'நகைக்கடன் வழங்க அழுத்தம் தரக்கூடாது' என்று தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர் யூனியன் கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் நான்காவது மாநில பேரவைக் கூட்டம், திருப்பூரில் நடந்தது. முன்னதாக பேரவை கொடியேற்றப்பட்டது. மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். வீட்டு வசதி சங்கங்களில் நகைக்கடன் வழங்க அழுத்தம் தரக் கூடாது. தகுதியான சங்கங்கள் மட்டுமே கடன் வழங்கலாம். நலிவடைந்த சங்கங்களையும் நகைக்கடன் வழங்க வற்புறுத்தக்கூடாது.

நகைக்கடனுக்கான வட்டி குறைக்க வேண்டும். பிரதம சங்க பணியாளர்கள் இறந்தால் வாரிசு வேலை வழங்க வேண்டும். பிரதம சங்கங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், 1977 முதல் தணிக்கை குறை நிவர்த்தி என்பதை கைவி ட வேண்டும். லாபத்தில் செயல்படும் சங்க பணியாளர்கள் ஊதிய தொகை, வட்டி வருவாயில் விளிம்பு தொகை 3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கைவிட வேண்டும். மருத்துவ காப்பீடு, ஊதிய உயர்வு ஒப்பந்தம், காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us