/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு

ADDED : மார் 02, 2026 06:09 AM

திருப்பூர்: திருப்பூரில், திருமணமான, மூன்று மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
திருப்பூர், அனுப்பர்பாளையம், கங்கா நகரை சேர்ந்தவர் விகாஸ் கண்ணன், 25. இவரது மனைவி ஷோபியா, 19. கடந்த டிச. 1 ம் தேதி திருமணம் நடந்தது. ேஷாபியா, கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், வீட்டில் ேஷாபியா நேற்று முன்தினம் துாக்குமாட்டி இறந்தார். திருமணமாகி, மூன்று மாதங்களே ஆன நிலையில் மனைவி தற்கொலை செய்த காரணத்தால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
நேற்று மாலை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஷோபியா இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, சடலத்தை வாங்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்தனர். தொடர்ந்து, மருத்துவமனை வெளியே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
போலீசார் கூறுகையில், ''ேஷாபியா கர்ப்பமானதால், கல்லுாரிக்கு செல்ல வேண்டாம் என விகாஸ் கண்ணன் கூறியுள்ளார். இதை ேஷாபியா ஏற்க மறுத்தார். இதுதான் தற்கொலைக்கு காரணமா, வேறு ஏதேனும் விவகாரமா என்று விசாரணை நடக்கிறது'' என்றனர்.