/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
த.வெ.க. கூட்டத்தில் கோஷ்டி பிரச்னை ஒருதரப்பு நிர்வாகிகள் வெளியேறினர்
/
த.வெ.க. கூட்டத்தில் கோஷ்டி பிரச்னை ஒருதரப்பு நிர்வாகிகள் வெளியேறினர்
த.வெ.க. கூட்டத்தில் கோஷ்டி பிரச்னை ஒருதரப்பு நிர்வாகிகள் வெளியேறினர்
த.வெ.க. கூட்டத்தில் கோஷ்டி பிரச்னை ஒருதரப்பு நிர்வாகிகள் வெளியேறினர்
ADDED : மார் 02, 2026 06:10 AM

திருப்பூர்: திருப்பூரில் நடந்த த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டிப் பிரச்னை காரணமாக ஒரு தரப்பினர் வெளியேறினர். கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் முடிவுக்கு வந்தது.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கான த.வெ.க செயல்வீரர் கூட்டம், காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில், நேற்று மதியம் நடந்தது.மாநகர் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். கூட்டம் துவங்கிய போது, மேடையில் அமர வேண்டிய நிர்வாகிகள் லிஸ்ட்டில் மாவட்ட இணை செயலாளர் குத்புதீன், பொருளாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை.அதிருப்தியடைந்த அவர்கள் மற்ற நிர்வாகிகளிடம் இது குறித்து கேட்ட போது, இரு தரப்பிடையே வாக்குவாதம் எழுந்தது. அவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் கூட்டத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து நடந்த கூட்டம் சில நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
கட்சியினர் கூறியதாவது:திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் இடையே துவக்கம் முதலே கோஷ்டிப்பிரச்னை நிலவி வருகிறது. இந்த கூட்டத்தை காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அரங்கில் நடத்த இணை செயலாளர் மற்றும் பொருளாளர் திட்டமிட்டு ஏற்பாடு செய்தனர். அங்கு நடத்தினால் அதிக செலவாகும் என்று மாவட்ட செயலாளர் இந்த மண்டபத்தை தேர்வு செய்து, கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால் இரு தரப்பிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிலையில், மேடையில் அமரும் நிர்வாகிகள் பட்டியலையும் மாவட்ட செயலாளர் தயார் செய்துள்ளார். இதனால் இரு தரப்பிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒரு தரப்பினர் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டனர். இது போன்ற கோஷ்டிப்பிரச்னைகள் வளர்ந்து வரும் கட்சிக்கு சரிப்பட்டு வராது. நிர்வாகிகள் இதை உணர வேண்டும். கட்சி தலைமையும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

