/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊட்டி பெண் இன்ஸ்பெக்டருக்கு திருப்பூர் கோர்ட் 'பிடிவாரன்ட்'
/
ஊட்டி பெண் இன்ஸ்பெக்டருக்கு திருப்பூர் கோர்ட் 'பிடிவாரன்ட்'
ஊட்டி பெண் இன்ஸ்பெக்டருக்கு திருப்பூர் கோர்ட் 'பிடிவாரன்ட்'
ஊட்டி பெண் இன்ஸ்பெக்டருக்கு திருப்பூர் கோர்ட் 'பிடிவாரன்ட்'
ADDED : மார் 03, 2026 02:58 AM
அவிநாசி: திருப்பூர் கோர்ட்டில், விசாரணைக்கு ஆஜராகாத, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், 2024ல் நடந்த கொலை முயற்சி சம்பவத்தில் தொடர்புடைய நால்வரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில், இவ்வழக்கு நடந்து வருகிறது. விசாரணை அதிகாரியாக, அப்போதைய அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா பணியாற்றினார். இவ்வழக்கில் சாட்சியம் அளிக்க, விசாரணை அதிகாரி என்ற வகையில், அவர் ஆஜராக வேண்டும். ஆனால், தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும், அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இன்ஸ்பெக்டர் கீதாவுக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அவிநாசியில் பணியாற்றிய கீதா, தற்போது ஊட்டியில் மாவட்ட குற்றப்பதிவேடுகள் பிரிவில் பணியாற்றுகிறார்.