/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வேளாண் பல்கலை
/
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வேளாண் பல்கலை
ADDED : ஜன 28, 2026 06:34 AM

திருப்பூர்: வேளாண் பல்கலை சார்பில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலான பயிற்சிகள், மாணவர்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
உணவே மருந்து என்ற அடிப்படையில், உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களை தவிர்த்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறு தானிய மற்றும் இயற்கை விவசாயத்தை, வேளாண் பல்கலை ஊக்குவித்து வருகிறது.
வேளாண் பல்கலையில் விவசாயம் மற்றும் அது சார்ந்த பாடங்களை படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியிலும், இயற்கை விவசாயம் குறித்த கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், கிராம தங்கல் திட்டத்தில், வேளாண் பல்கலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், திருப்பூர், பொங்கலுார் கிராமத்தில் விவசாயிகள் மத்தியில் கலந்துரையாடி, அவர்களது அனுபவத்தை தெரிந்துக் கொண்டு, தாங்கள் கற்றதை அவர்களிடம் விளக்கி வருகின்றனர்.
தேவணம்பாளையம் கிராமத்தில், வேப்பிலை மற்றும் எருக்கு இலை கொண்டு பூச்சி விரட்டி தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். இதன் மூலம், ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல், பூச்சி பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும். ரசாயன பூச்சிக் கொல்லி ஏற்படும் நச்சுத்தன்மையை தவிர்க்க முடியும். தற்போதைய சூழலில், இயற்கை விவசாயம் அவசியமானது என்ற சூழலில், இயற்கை விவசாயத்தை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

