/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர்களுக்கு நுண்ணுாட்டம் வேளாண் துறை அறிவுரை
/
பயிர்களுக்கு நுண்ணுாட்டம் வேளாண் துறை அறிவுரை
ADDED : ஏப் 14, 2025 10:16 PM
உடுமலை, ;பயிர்களில் நோய் தாக்குதலை தடுக்கவும், அதிக மகசூல் பெறவும், நுண்ணுாட்டம், உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும், என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்த, வேளாண் விஞ்ஞானிகளின் ஆய்வு கூட்டத்தில், நெல், மக்காச்சோளம், உளுந்து, சோளம், தென்னை, காய்கறி பயிர்கள் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் நுண்ணூட்டம், பேரூட்டம் அவசியமாக உள்ளது.
ஆனால், பெரும்பாலான விவசாயிகள் பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்டம், பேரூட்டம் இடாததால், ஊட்டச்சத்து பற்றாக்குறையே, நோய் தாக்குதலுக்கு முக்கிய காரணியாக உள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான, நுண்ணுாட்ட உரங்கள் வேளாண் விரிவாக்கம் மையத்தில் தேவையான அளவு இருப்பு உள்ளது. நுண்ணூட்ட உரம், உயிர் உரங்களை, மக்கிய தொழு உரத்துடன் கலந்து பயன்படுத்தவும்.
உரச்சத்தை பயிர்களின் வேர் எடுக்க வேண்டும் என்றால், கரிமச்சத்தும் உயிர் உரங்களும் முக்கியமாக வேண்டும். எனவே, விவசாயிகள் குறைந்த செலவில், நிறைந்த மகசூல் பெற நுண்ணுாட்டம், உயிர் உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.