/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை உரத்தட்டுப்பாடு விதி மீறினால் கடும் நடவடிக்கை வேளாண் துறை எச்சரிக்கை
/
செயற்கை உரத்தட்டுப்பாடு விதி மீறினால் கடும் நடவடிக்கை வேளாண் துறை எச்சரிக்கை
செயற்கை உரத்தட்டுப்பாடு விதி மீறினால் கடும் நடவடிக்கை வேளாண் துறை எச்சரிக்கை
செயற்கை உரத்தட்டுப்பாடு விதி மீறினால் கடும் நடவடிக்கை வேளாண் துறை எச்சரிக்கை
ADDED : அக் 23, 2025 11:11 PM
உடுமலை: உர விற்பனையில் எந்த வித செயற்கை உரத் தட்டுப்பாடும் ஏற்படாதவாறு கண்காணித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறையினர் எச்சரித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரவடிவேலு கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் ராபி பருவத்தில் பெரும்பாலும், மானாவாரி பயிர்களும், இறவை பயிரான மக்காச்சோளபயிரும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பயிர்களுக்கு தேவையான உரங்கள், அனைத்து தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் தேவையான அளவு இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, மாவட்டத்தில் யூரியா, 2,349 டன், டி.ஏ.பி., 2,256 டன், பொட்டாஷ், 892 டன், சூப்பர் பாஸ்பேட், 714 டன் மற்றும் காம்ப்ளக்ஸ், 4,916 டன் உரங்கள் இருப்பு உள்ளது.
தற்போது நிலவும் யூரியா உரத்தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இ-ப்கோ நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, 650 டன் நடப்பு மாதத்தில் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உர விற்பனை குறித்து, அனைத்து உர விற்பனையாளர்களுக்கும் வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு, உரங்களை விற்பனை முனை இயந்திரம் வாயிலாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும், விற்பனை விலைக்கு அதிகமாக விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட்டார அளவிலுள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களிலும், வேளாண் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தர பரிசோதனைக்காக உர மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
உர விற்பனையில் எந்த வித செயற்கை உரத் தட்டுப்பாடும் ஏற்படாதவாறு கண்காணித்து வருகின்றனர். மேலும், விதிமுறைகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் ஆய்வு கூட்டங்கள் நடத்தி, ஒவ்வொரு பகுதிகளிலும் பயிர் சாகுபடிக்கு ஏற்ப தேவைப்படும், இடங்களில் உரங்களை மாறுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு, இணை இயக்குநர் சுந்தரவடிவேலு தெரிவித்தார்.

