/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் அலுவலகம் இடமாற்றம்: பழுதான கட்டடம் இடிக்க ஆயத்தம்
/
வேளாண் அலுவலகம் இடமாற்றம்: பழுதான கட்டடம் இடிக்க ஆயத்தம்
வேளாண் அலுவலகம் இடமாற்றம்: பழுதான கட்டடம் இடிக்க ஆயத்தம்
வேளாண் அலுவலகம் இடமாற்றம்: பழுதான கட்டடம் இடிக்க ஆயத்தம்
ADDED : ஜூலை 03, 2025 12:25 AM
பல்லடம்:
பழமையான இந்த அலுவலக கட்டடத்தின் பெரும் பகுதி சேதமடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த கட்டிடத்தின் மேற்கூரையின் சில பகுதிகள் பெயர்ந்து விழுந்ததால், இங்கு செயல்பட்டு வந்த மண் பரிசோதனை மையம் பொங்கலுாருக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், வலுவிழந்த இக்கட்டடத்தில், ஆபத்துக்கு இடையே, வேளாண் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இச்சூழலில், மாற்று இடம் கிடைக்காததால், பல்லடம் வேளாண் அலுவலகம், தற்காலிகமாக, நகராட்சிக்கு அருகிலுள்ள வாடகை கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை அலுவலகத்துக்கு இடம் கிடைக்காத நிலையில், கட்டடம் தேடும் பணி நடந்து வருகிறது.
வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்கள், ஒரே இடத்தில் செயல்பட்டால் மட்டுமே, விவசாயிகள் தங்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
இல்லாவிடில், தேவையற்ற அலைச்சலுக்கு ஆளாவர். புதிய கட்டடம் கட்டுவதற்கான எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், இட நெருக்கடியுடன், வாடகை கட்டடத்தில் வேளாண் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.
இது, பணிபுரியும் அலுவலர்களுக்கு மட்டுமின்றி, விவசாயிகளுக்கும் இடையூறாக அமையும். எனவே, பல்லடத்தில், ஒருங்கிணைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்கள் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

