ADDED : அக் 16, 2024 12:26 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ண வேணி வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக, பருவமழை பெய்துவருகிறது. நடப்பு பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் பயிர்களுக்கு தேவையான அனைத்து உரங்களும், தனியார் விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், யூரியா 3,265 டன்; டி.ஏ.பி., 562 டன்; பொட்டாஷ், 1,584 டன்; சூப்பர் பாஸ்பேட் 865; காம்ப்ளக்ஸ் 5,963 டன் இருப்பு உள்ளது. உரம் இருப்பு மற்றும் விற்பனை குறித்து, உர கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது; மீறினால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.