/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஏ.ஐ., தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு அவசியம்'
/
'ஏ.ஐ., தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு அவசியம்'
ADDED : ஜன 20, 2025 11:41 PM

திருப்பூர்; ''நிதி மற்றும் தணிக் கைத்துறை உள்ளிட்ட மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.,) வளர்ச்சி அவசியமானது,'' என, பி.டி.ஓ-., - லண்டன் அலுவலகக் கிளை தணிக்கை மேலாளர் கபிலன் பேசினார்.
'வளர்ந்து வரும் பாதைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன்' என்ற தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கு, திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லுாரியில் நேற்று தொடங்கியது.
கல்லுாரி செயலாளர் முனைவர் ஹெலன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் முனைவர் சகாய தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளரான, வணிகவியல் துறையின் தலைவர் முனைவர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
இணை பேராசிரியர் விஜயராணி வரவேற்றார்.தொழில்நுட்ப முதல் அமர்வில் ஜெர்மனியின் சர்வதேச தணிக்கை நிறுவனமான பி.டி.ஓ-., வின் லண்டன் அலுவலகக் கிளையின் தணிக்கை மேலாளர் கபிலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''நிதி மற்றும் தணிக்கைத்துறை உள்ளிட்ட மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அவசியமானது. அதற்கேற்ப, வரும் காலங்களில் மாணவ, மாணவியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
தகவமைப்பை உற்படுத்திக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அதேநேரத்தில் இணைய வழி குற்றங்களில் இருந்து எவ்வாறு விலகி இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவசியம்,'' என்றார்.
இரண்டாம் அமர்வில் திருப்பூர் அனுக்கிரஹா பேஷன் துணைத்தலைவர் மோகன், இந்திய உற்பத்தித் தொழில் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றி விரிவாக பேசினார்.
மதியம் நடந்தஅமர்வில் பல்வேறு கல்லுாரிகளின் மாணவர்கள் தங்களது திட்ட விளக்க அறிக்கைகளை சமர்ப்பித்து உரையாற்றினர். முதல்நாள் நிகழ்ச்சியின் நிறைவாக உதவி பேராசிரியர் கனகலட்சுமி நன்றி கூறினார்.
தொழில் நுட்ப மேலாண்மை நிகழ்வில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார், 'ஆடை உற்பத்தி தொழில் - 4.0' மற்றும் தொழில் நுட்பத்தினை முன்னெடுத்தல் என்னும் தலைப்பில் பேசுகிறார். பாரதியார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர், முனைவர் ஜெயச்சந்திரன் பேச உள்ளார் என்று கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

