/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க., 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை
/
அ.தி.மு.க., 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : ஜூலை 29, 2025 11:50 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் தெற்கு மத்திய பகுதி சார்பில், 'பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.பி., சிவசாமி, பகுதி செயலாளர் கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் பழனிசாமி, தென்னம்பாளையம் பகுதி செயலாளர் அன்பகம் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட பொறுப்பாளர் தாமோதரன், கிளை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கட்சி பணிகளை, திறம்பட மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். பொதுசெயலாளரின் திருப்பூர் பயணத்தை விளக்கி, தெருமுனை பிரசாரம் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும், ஒரு லட்சம் பேரை திரட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல், தென்னம்பாளையம் பகுதி அளவிலான பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சிவளாமஹாலில் நடந்தது.