/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை; மிரட்டியவர் கைது : 3 பேருக்கு வலை
/
அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை; மிரட்டியவர் கைது : 3 பேருக்கு வலை
அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை; மிரட்டியவர் கைது : 3 பேருக்கு வலை
அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை; மிரட்டியவர் கைது : 3 பேருக்கு வலை
ADDED : ஜூலை 04, 2025 11:37 PM

திருப்பூர்; வியாபாரத்தில், கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தில் மிரட்டப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றிய மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., - ஐ.டி., விங் நிர்வாகி செல்வானந்தம். நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மொபைல் போனில் இருந்த சில ஆடியோ பதிவுகளில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அவரது மனைவி முத்துப்பிரியா, குண்டடம் போலீசில் புகார் அளித்தார்.
மக்காச்சோளம் வர்த்தகம் செய்து வந்த செல்வானந்தத்துக்கு பழநியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கொடுக்கல் - வாங்கல் இருந்தது. இதில் மதுரை மண்டல தி.மு.க., பொறுப்பாளர் மணிமாறன், மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அவரை மிரட்டியது; பழநியைச் சேர்ந்த வெங்கடேஷ்,விருதுநகரைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரும் மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிப்புத்துாரைச் சேர்ந்த சீனிவாசன், 44 என்பவர் தஞ்சையில் கைது செய்யப்பட்டார்.
செல்வானந்தத்தை மிரட்டி இவர் காசோலை பெற்று சென்றது விசாரணையில் தெரிந்தது. தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். மேலும், இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்.