/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் எம்.எல்.ஏ., குடும்பத்தினருக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஆறுதல்
/
முன்னாள் எம்.எல்.ஏ., குடும்பத்தினருக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஆறுதல்
முன்னாள் எம்.எல்.ஏ., குடும்பத்தினருக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஆறுதல்
முன்னாள் எம்.எல்.ஏ., குடும்பத்தினருக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஆறுதல்
ADDED : ஜூன் 12, 2025 05:09 AM

திருப்பூர் : மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் குடும்பத்தினரை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருப்பூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், உடல்நலக்குறைவால் காலமானார். மாநகராட்சி துணை மேயர் பொறுப்பையும் வகித்துள்ளார். அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, நேற்று திருப்பூரில் உள்ள குணசேகரன் வீட்டுக்கு வந்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அலங்கரிக்கப்பட்ட குணசேகரன் படத்துக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். தாயார் பொன்னம்மாள், மனைவி கவிதா, மகன் பூமிஷ், மகள் கோகுலப்பிரியா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 'அண்ணா, எங்களுக்கு யார் இருக்கிறார்கள்...'' என்று கூறியபடி கதறி அழுத கவிதாவிடம், 'நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்மா... தைரியமாக இருங்க,' என்று ஆறுதல் கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்தன் (பல்லடம்), விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), ஜெயக்குமார் (பெருந்துறை), மகேந்திரன் (மடத்துக்குளம்), முன்னாள் எம்.பி., சிவசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். முன்னதாக, பழனிசாமி வருகையை அறிந்து, பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.