/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏஜன்ட்களிடம் படிவம் ஒப்படைக்க அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு
/
ஏஜன்ட்களிடம் படிவம் ஒப்படைக்க அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு
ஏஜன்ட்களிடம் படிவம் ஒப்படைக்க அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு
ஏஜன்ட்களிடம் படிவம் ஒப்படைக்க அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு
ADDED : நவ 09, 2025 04:51 AM
திருப்பூர்,:திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளருக்கு, தலா, 2 படிவங்களை வழங்கி வருகின்றனர்.
பூர்த்தி செய்த பின், ஒரு படிவத்தை திரும்ப பெற வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களை, அதிக பட்சம் 50 படிவங்கள் வரை, கட்சி ஏஜன்டுகள் வாயிலாகவும் ஒப்படைக்கலாம் என்று, தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர். இதற்கு, அ.தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்தன், ராதாகிருஷ்ணன், விஜயகுமார், மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், நடராஜன் மற்றும் கட்சியினர், திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:
தேர்தல் கமிஷன் மூலம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்து வருகிறது. இதில், பி.எல்.ஓ.,க்கள் வீடு வீடாக சென்று படிவம் வழங்கி, மற்றொரு நாளில் அவர்களே திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் கட்சி ஏஜன்டுகளும், 50 படிவம் வரை பெறலாம் என்று கூறுவதை ஏற்க முடியாது. கட்சி ஏஜன்டுகள், விண்ணப்ப படிவத்தை பெற்று, கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பது தவறான முன்னுதாரணம். இதை தவிர்க்க, பி.எல்.ஓ., மூலம் மட்டுமே, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.

