/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழி வளர்ப்பில் திருப்பூர் 'நெம்பர் 1'
/
கோழி வளர்ப்பில் திருப்பூர் 'நெம்பர் 1'
ADDED : நவ 09, 2025 04:51 AM
திருப்பூர்:தமிழக
அளவில், நாட்டுக்கோழி வளர்ப்பில், திருப்பூர் சிறந்து விளங்கும்
நிலையில், அதற்கென வழங்கப்படும், பிரத்யேக பயிற்சியில் பங்கேற்று,
தொழிலை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய தொழில் முனைவோரை
உருவாக்கவும், தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
தமிழக
அரசின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு முடித்த
இளைஞர், இளம் பெண்களையும் தொழில் முனைவோராக மாற்றும் வகையிலான
திட்டங்கள் மற்றும் பயிற்சிகள், பல்வேறு அரசுத்துறையினர் வாயிலாக
வழங்கப்படுகிறது.
அதன்படி, கால்நடை பராமரிப்புத்துறை
சார்பில், திருப்பூரில் செயல்படும் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும்
ஆராய்ச்சி மையத்தில், 'நாட்டுக்கோழி வளர்ப்பு' தொடர்பாக, 200 மணி நேர
பயிற்சி வழங்கப்பட இருக்கிறது; பங்கேற்பாளர்களுக்கு, ஊக்கத்
தொகையாக, அவர்களது வங்கிக் கணக்கில், 6,000 ரூபாய் வரவு வைக்கப்படும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பயிற்சியில் பங்கேற்க கோழி
வளர்ப்பில் ஈடுபடுவோர் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைவாக
இருப்பதாக கூறப்படுகிறது.
கால்நடை பல்கலை பயிற்சி மற்றும்
ஆராய்ச்சி மையத்தினர் கூறியதாவது: தமிழக அளவில், நாட்டுக்கோழி
வளர்ப்பில், திருப்பூர் மாவட்டம் சிறந்து விளங்குகிறது. இத்தொழிலில்
விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் உட்பட பண்ணை முறை தொழிலாகவும் பலர்
ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக்
கொள்ளவும், 18 வயது நிரம்பியவர்கள் சுயமாக தொழில் புரியும் வாய்ப்பு
ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் தான், தமிழக அரசின் சார்பில்
இத்தகைய பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார், 28
நாட்கள் வழங்கப்படும் இப்பயிற்சியில் நாட்டுக்கோழி உற்பத்தி
துவங்கி, பரா மரிப்பு, வளர்ப்பு மற்றும் சந்தை வாய்ப்பு வரையுள்ள அனைத்து
விஷயங்களும், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ரீதியாக
பயிற்றுவிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் தமிழக அரசின் வெற்றி
நிச்சயம் இணைய தளம் வாயிலாக தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள
வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 0421 2248524 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

