/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஜெயராமன் அழைப்பு
/
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஜெயராமன் அழைப்பு
ADDED : நவ 23, 2025 07:13 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், தெருமுனை பிரசாரம் கூட்டம் வாவி பாளையத்தில் நடந்தது.
ஜெ. பேரவை மாவட்ட செயலர் அட்லஸ் லோகநாதன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. விஜயகுமார் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் நாச்சிமுத்து, வரவேற்றார்.
மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
திருப்பூரில் எங்கு பார்த்தாலும் குப்பை. சிறுபூலுவபட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலம் பகுதியில், துர்நாற்ற நெடி தாங்காது மூக்கை பிடிக்காமல் ஒரு மணி நேரம் இருந்தால் ஒரு பவுன் தங்கம் பரிசாக தருகிறேன்.
குப்பை பிரச்னைக்கு தீர்வு கோரி, 25ல் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் எல்லோரும் பங்கேற்போம். எஸ்.ஐ.ஆர் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க.,வினர் தங்கள் கைவரிசையைக் காட்டிவிடுவர்.
இவ்வாறு ஜெயராமன் பேசினார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

