/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு குரல் பல்லடம் அ.தி.மு.க., வில் ஒலிக்காத 'மர்மம்'
/
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு குரல் பல்லடம் அ.தி.மு.க., வில் ஒலிக்காத 'மர்மம்'
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு குரல் பல்லடம் அ.தி.மு.க., வில் ஒலிக்காத 'மர்மம்'
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு குரல் பல்லடம் அ.தி.மு.க., வில் ஒலிக்காத 'மர்மம்'
ADDED : நவ 17, 2024 04:47 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் சொத்துவரி உயர்வுக்கு எதிராக, யாரும் குரல் கொடுப்பதில்லை என, பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க.,வினர் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், மாநகராட்சியின், 50 வார்டுகள் அடங்கியுள்ளன. பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியின், 10 வார்டுகள், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
பல்லடம் தொகுதி அ.தி.மு.க., வசம் இருந்தும், மாநகராட்சியின் பல்லடம் தொகுதி வார்டுகள், கவனிப்பில்லாமல் இருக்கின்றன. இதேபோல் கண்டுகொள்ளாமல் இருந்ததால், கடந்தமுறை அ.தி.மு.க., வசம் இருந்த வார்டுகளையும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் கைப்பற்றின.
மாநகராட்சியின், 60 வார்டுகளிலும் செல்வாக்குடன் இருந்தால் மட்டுமே, அடுத்து வரும் தேர்தல்களில் மீண்டும் மாநகராட்சி தேர்தலை சந்திக்க முடியும். மாறாக, அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இருவேறு கட்சி மாவட்டங்களாக இருப்பதால், குளறுபடி அதிகம் நடக்கிறது.
மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகளும், இதே சிக்கலை சந்தித்து வருகின்றன. ஊராட்சிகளில் ஏற்படும் மக்கள் பிரச்னைகளுக்கு, அ.தி.மு.க.,வில் இருந்து எதிர்ப்பு குரல் வருவதில்லை என்ற அதிருப்தி இருக்கிறது.
மாநகராட்சியில், சொத்துவரி உயர்வு தொடர்பாக, திருப்பூர் மாநகர் மாவட்ட எல்லையில் உள்ள, வார்டுகளுக்காக, போராட்டங்கள் நடத்தப்பட்டது. பல்லடம் தொகுதியில் உள்ள, 10 வார்டு மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை எடுத்துக்கூறி போராடாமல், அ.தி.மு.க., அமைதி காப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநக ராட்சி மக்கள் கூறுகையில், 'திருப்பூர் மாநகராட்சியில், எதிர்க்கட்சி வலுவாக இருக்கும் வார்டுகளில் சொத்துவரி உயர்வுக்கு எதிராக, போராட்டம் நடக்கிறது. கம்யூ., கட்சிகள் கூட தாமதமாக குரல் கொடுக்க துவங்கிவிட்டன.
ஆனால், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளில், சொத்து வரி உயர்வு குறித்து போராட ஆளில்லை. இனியாவது, சொத்துவரி பிரச்னையை பெரிதாக்கி, போராட்டங்கள் நடத்தவும், எதிர்ப்பு குரல் கொடுக்கவும், பல்லடம் எம்.எல்.ஏ., முன்வர வேண்டும்,' என்றனர்.