/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 01, 2024 11:20 PM

சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு- - 2, மாவட்ட சுற்றுலாத்துறை ஆகியன சார்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் நேற்று நடந்தது. என்.எஸ்.எஸ்., அலகு -- 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் பேசினார். ' சரியான பாதையில் செல்லுங்கள்; எனது ஆரோக்கியம் எனது உரிமை' என்ற மையக்கருத்தை வலியுறுத்தி மாணவ செயலர்கள் முகத்தில் விழிப்புணர்வு வர்ணம் வரைந்தும், எய்ட்ஸ் குறியீடு கொண்ட சிவப்பு ரிப்பனை பார்வையாளர்களுக்கு அணிவித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட சுற்றுலா சங்க நிர்வாகிகள் பூபதி, லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.