sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழாயில் வருது 'காற்று'; ரோட்டில் ஓடுது 'ஆறு' கொளுத்தும் வெயிலில் குடிநீர் இப்படி வீணாகலாமா?

/

குழாயில் வருது 'காற்று'; ரோட்டில் ஓடுது 'ஆறு' கொளுத்தும் வெயிலில் குடிநீர் இப்படி வீணாகலாமா?

குழாயில் வருது 'காற்று'; ரோட்டில் ஓடுது 'ஆறு' கொளுத்தும் வெயிலில் குடிநீர் இப்படி வீணாகலாமா?

குழாயில் வருது 'காற்று'; ரோட்டில் ஓடுது 'ஆறு' கொளுத்தும் வெயிலில் குடிநீர் இப்படி வீணாகலாமா?

2


ADDED : மே 04, 2024 02:10 AM

Google News

ADDED : மே 04, 2024 02:10 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் வீட்டுக்கு தேவையான குடிநீர் சீரான இடைவெளியில் சரிவர வினியோகிப்பதில்லை. ஆனால், முக்கிய சாலைகளில், 24 மணி நேரம் குடிநீர் வீணாகி கால்வாயில் கலக்கிறது.

திருப்பூரில் நல்ல தண்ணீர் ஒரு குடம் மூன்று ரூபாய்க்கும், உப்பு தண்ணீர் இரண்டு ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மாநகராட்சியின் நான்கு மண்டலத்தில் உள்ள, 60 வார்டுகளுக்கு நான்கு முதல், எட்டு நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்பட்ட தண்ணீர், வறட்சி, வெயிலால் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, ஆறு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறையே வினியோகிக்கப்படுகிறது.

அதுவும் போதுமானதாக இருப்பதில்லை. அடுத்த முறை தண்ணீர் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்க வேண்டி இருப்பதாக, பெண்கள் புலம்புகின்றனர். ஆனால், திருப்பூரில் முக்கிய சாலை, சந்திப்புகளில் மெயின் குழாய்கள் உடைந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் வீணாவது தொடர்கிறது.

மாவட்டத்தில், 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருவதால், திருப்பூரில் குடிநீர் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், சாலையில் இவ்வாறு குடிநீர் வீணாவது பார்ப்போரை வேதனை அடைய செய்துள்ளது.

100 மீட்டருக்குள் 3 இடங்களில்...


திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் முதல் மில்லர் ஸ்டாப் வரையிலான, 100 மீ., துாரத்துக்குள் மூன்று இடங்களில் மெயின் குழாய் உடைந்து தண்ணீர், 24 மணி நேரமும் வழிந்தோடி, அவ்விடமே வாய்க்கால் போல் மாறி விட்டது.

சாக்கடை கால்வாய்க்கு சென்று வீணாகும் தண்ணீரை பார்க்கும், அவ்வழியை கடந்து செல்லும் பெண்கள், 'வீட்டுக்கு ஒழுங்கா தண்ணீ வர்றதில்ல. ஆனால், திரும்பின பக்கமெல்லால் ரோட்டுல தான் ஓடுது.வெயில அடிக்கிற காலத்துல, தண்ணீ வீணாகி போறது யாரு தான் பார்ப்பார்களே,' என புலம்புகின்றனர்.

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, அணைக்காடு ஸ்டாப்பில், 45 நாட்களாக தண்ணீர் வீணாகிறது. அதில் வாகனங்கள் அப்படியே பயணிக்கிறது; சாலை சேதமாகிறது. திருப்பூர் காமராஜர் ரோட்டில், முதல் குடிநீர் திட்ட குழாய் உடைந்து, 35 நாட்களாக தண்ணீர் வீணாகிறது.

மாநகராட்சி குடிநீர் பிரிவினர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு மாதத்துக்கு மேலாக பிரச்னை தொடர்வதால், உடனே குழாய் உடைப்புகளை சரிசெய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us