/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அக்., 14ல் ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
/
அக்., 14ல் ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 30, 2024 06:47 AM

திருப்பூர் : பனியன் பேக்டரி லேபர் யூனியன் சங்க (ஏ.ஐ.டி.யு.சி.,) பொதுக்குழு கூட்டம், திருப்பூர் - பி.என்., ரோட்டிலுள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொருளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சேகர், பனியன் தொழிலாளருக்கு போனஸ் பெற்றுக்கொடுப்பது குறித்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், அன்றாட குடும்ப செலவினங்களுக்கே போதுமானதாக இல்லை. பெரும்பாலான குடும்பங்கள், கடன் சுமையால் கஷ்டப்பட்டுவருகின்றன. துணி, இனிப்பு ரகங்கள் வாங்கி பண்டிகையை கொண்டாட, தீபாவளி போனஸ் தொகையையே நம்பியுள்ளனர். பனியன் தொழிலாளர் அனைவருக்கும் பண்டிகைக்கு 15 நாள் முன்பு, போனஸ் வழங்கவேண்டும். போனஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களை அணுகி தெரிவிக்கவேண்டும். போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி, வரும் அக்., 14ம் தேதி மாலை, 5:00 மணிக்கு குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.