/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி போனஸ் கேட்டு ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
/
தீபாவளி போனஸ் கேட்டு ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 16, 2024 12:29 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில், ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றும், துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில், மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க பொது செயலாளர் நடராஜன், மாநில செயலாளர் சேகர், ஜெகநாதன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, கோரிக்கை மனுவை, மேயர், துணை மேயர் மற்றும் துணை கமிஷனர் ஆகியோரிடம் நிர்வாகிகள் அளித்தனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினாலும், போனஸ் வழங்க வேண்டும். இதனை ஒப்பந்த நிறுவனம் நேரடியாக வழங்காவிட்டால், மாநகராட்சி நிர்வாகம் அதனை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.