/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலங்கியம் முருகன் மர்ம மரணம்? ஆணைய உறுப்பினர்கள் விசாரணை
/
அலங்கியம் முருகன் மர்ம மரணம்? ஆணைய உறுப்பினர்கள் விசாரணை
அலங்கியம் முருகன் மர்ம மரணம்? ஆணைய உறுப்பினர்கள் விசாரணை
அலங்கியம் முருகன் மர்ம மரணம்? ஆணைய உறுப்பினர்கள் விசாரணை
ADDED : ஜூலை 12, 2025 01:50 AM
திருப்பூர்; அலங்கியம் முருகன் மரணம் தொடர்பாக, எஸ்.சி., / எஸ்.டி., ஆணைய உறுப்பினர்கள் நேற்று விசாரணை நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே, சென்னாக்கல்பாளையத்தை சேர்ந்த முருகன், 42. ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி, மணிமேகலை. தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். கடந்த ஜூன் 26ம் தேதி, மேட்டுக்காடு தோட்டத்திலுள்ள வேப்பமரத்தில், இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில், முருகன், துாக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரித்த அலங்கியம் போலீசார், முருகன் மனமுடைந்து தற்கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், '10 அடி உயரமான மரத்தில் ஏறி, கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் எப்படி தற்கொலை செய்யமுடியும்; அப்பகுதியை சேர்ந்த சிலர் முருகனை அடித்து, கொலை செய்து, தொங்கவிட்டுள்ளனர். முருகனின் மரணத்தில் மர்மம் உள்ளதால், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்' எனக்கோரி, பல்வேறு அமைப்பினர், திருப்பூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோரிடம் மனு அளித்தனர்.
நேற்று, தாழ்த்தப்பட்டோர் ஆணைய (எஸ்.சி., - எஸ்.டி., ஆணையம்) உறுப்பினர்கள் பொன்தோஸ், செல்வக்குமார் ஆகியோர், முருகன் மரணம் தொடர்பாக, அவர் பிரேதமாக மீட்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு, உறவினர்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, விருந்தினர் மாளிகையில்,போலீசார், வருவாய்த்துறையினரிடம், ஆணைய உறுப்பினர்கள், முருகன் மரணம் தொடர்பாக விசாரித்தனர்.

