/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மதுபான' வேன் - கார் மோதல் ஒருவர் பலி; பாட்டில்கள் சேதம்
/
'மதுபான' வேன் - கார் மோதல் ஒருவர் பலி; பாட்டில்கள் சேதம்
'மதுபான' வேன் - கார் மோதல் ஒருவர் பலி; பாட்டில்கள் சேதம்
'மதுபான' வேன் - கார் மோதல் ஒருவர் பலி; பாட்டில்கள் சேதம்
ADDED : அக் 28, 2024 01:33 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம், வீராணம்பாளையத்தில் அரசு மதுபான கிடங்கு உள்ளது.
கிடங்கில் இருந்து காங்கேயம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை இறக்குவதற்கு, 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான லோடை, ஈரோட்டைச் சேர்ந்த வேன் டிரைவர் சோமசுந்தரம், 40, உதவியாளர்கள் சரவணக்குமார், 31, அஸ்வின், 21, கார்த்தி, 40, ஆகியோர் வேனில் ஏற்றி கொண்டு, காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வீராணம்பாளையம், ஸ்ரீராம் நகர் அருகே, திருப்பூர் ஊத்துக்குளியில் தங்கி வேலை செய்யும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நசீம், 38, முகமது பர்மன், 24 ஆகியோர் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, வேன் மீது மோதியது.
இதில், வேன் ரோட்டில் கவிழ்ந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் உடைந்து சேதமாகின.
காரை ஓட்டி வந்த நசீம், உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
காயமடைந்த வேன் டிரைவர் உட்பட ஐந்து பேரை மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.