/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகில பாரத வக்கீல் சங்க மாநில மாநாடு
/
அகில பாரத வக்கீல் சங்க மாநில மாநாடு
ADDED : ஆக 10, 2025 02:40 AM

திருப்பூர் : அகில பாரத வக்கீல்கள் சங்கத்தின் 2வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ஐகோர்ட் நீதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அகில பாரதிய அத்வைக்த பரிஷத் அமைப்பில் இணைந்துள்ள அகில பாரத வக்கீல்கள் சங்கம் - தமிழ்நாடு அமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு திருப்பூர் காயத்ரி மகாலில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
பொது செயலாளர் பாபு வரவேற்றார். திருப்பூர் மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். சென்னை ஐகோர்ட் நீதிபதி சதீஸ் குமார், மூத்த வக்கீலும் கூடுதல் சொலிசிட்டருமான சுந்தரேசன், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழனிகுமார், தேசிய துணை தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
தமிழகம் முழுவதிலிருந்து 26 மாவட்டங் களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான வக்கீல்கள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் நீதித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்; டிஜிட்டல் மயமாகும் நீதித்துறை நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய உட்கட்டமைப்புகள்; வக்கீல் மற்றும் நீதிபதிகள் இடையே உள்ள ஒருங்கிணைப்பில் உள்ள சவால்கள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின் முடிவில், மேற்கொள்ள வேண்டிய சட்டத்திருத்தங்கள், வக்கீல் நலன்கள், எதிர்கால திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை, சட்டத்துறையை மேலும் திறன் மற்றும் தொழில் நுட்ப நவீனம் ஆகியன குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.