/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைத்திருவிழாவில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கணும்
/
கலைத்திருவிழாவில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கணும்
கலைத்திருவிழாவில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கணும்
கலைத்திருவிழாவில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கணும்
ADDED : அக் 16, 2024 01:53 AM
உடுமலை:'கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கலைத்திருவிழா போட்டிகளில், அரசு பள்ளிகளில் படிக்கும் பொதுத்தேர்வு மாணவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்' என, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளிகளில் புத்தக படிப்பு மட்டுமே இல்லாமல், மாணவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும், சமூக பார்வை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பெறுவதற்கும் பல்வேறு போட்டிகள், மன்ற செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், ஒன்பது, பத்தாம் வகுப்பு ஒரு பிரிவு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 ஒரு பிரிவாகவும் போட்டி நடக்கிறது.
இதில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான பிரிவில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பதில்லை. மேல்நிலை வகுப்பு மாணவர்கள் முற்றிலுமாகவே போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கூறியதாவது:
மாணவர்கள் போட்டி திறன்கள் அனைத்தும் முடக்கப்படுகிறது. தற்போது, கலைத்திருவிழா போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும்.
பெரும்பான்மையான அரசு பள்ளிகளில், மாணவர்களிடம் திறன்கள் இருந்தும், பொதுத்தேர்வுக்கு படிப்பதால், போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.
பொதுத்தேர்வு முதன்மையாக இருப்பினும், மாணவர்களுக்கு இதுபோன்ற போட்டிகள் தான் எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் சவால்களை சமாளிப்பதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். கல்வித்துறை இதுகுறித்து பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.