ADDED : நவ 08, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்: திருப்பூர் வடக்கு ஒன்றிய அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டம் பெருமாநல்லுார் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சண்முகம், தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், முன்னிலை வகித்தார். பொருளாளர் கோபால்சாமி வரவேற்றார்.
கூட்டத்தில், வந்தே மாதரம் பாடல் இயற்றி 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு அனைவரும் தேசிய கொடியை ஏந்தி வந்தே மாதரம் பாடல் பாடி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, பாலிதீன் பயன்பாட்டை குறைப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை செயலாளர் குமார், ஊராட்சி மன்ற செயலர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

